- வேலூர், டிச.21: காட்பாடி
- ரயில் நிலையம் அருகே 11 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீ சார் காட்பாடி ரயில் நிலையம் அருகே நேற்று சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசா ரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்ததது தெரிய வந்ததது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் கேரளா மாநிலத்தை சேர்ந்த ரஹீம் (26), உதய (25), ) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- 6 பண்டல்களில் 11 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வங்கி வந்து, கேரளா, தமிழ்நாட்டில் விற்பனை செய்யதுள்ளனர்.