மையமாக மாறிய குஜராத்
மனித கடத்தல் ஏஜெண்டுகளின் பிரதான மையமாக குஜராத் மாநிலம் உருவெடுத்துள்ளதாக அமலாக்கத்துறை நடத்திய புலனாய்வு விசாரணனையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 4,500 வரையிலான மனித கடத்தல் ஏஜெண்டுகளின் வலையமைப்பை அமலாக்கத்துறை வெளிப்படுத்தியுள்ளது. அவர்களில் 2,000 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் Telegraph நாளிதழிடம் தெரிவித்துள்ளார் . அந்த ஏஜெண்டுகள், குறைந்தது 150 கனேடிய கல்லூரிகளுடன் இணைந்து, இந்தியர்களை கனடா வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைய உதவி செய்கின்றனர்.
Telegraph நாளிதழின் செய்தியின்படி, ஏஜெண்டுகள் தங்கள் வாடிக்கையாளர்களை கனேடிய கல்லூரிகளுக்கு மாணவர் விசா மூலம் அனுப்பி, அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையை கடந்து செல்ல உதவுகின்றனர்.
ஒரு நபருக்கு ரூ.55-60 லட்சம் வரை ஏஜெண்டுகள் வசூலிப்பதாகவும், இது தொடர்பாக பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரி கூறியுள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் குஜராத்திகளே அதிகம். 2023-ம் ஆண்டில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 67,391 இந்தியர்களில், குஜராத்திகள் மட்டும் 41,330 பேர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.