திருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா பன்னாட்டு பள்ளியில் 4 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் கே.வி.அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர்.சக்தி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட துணைகண்காணிப்பாளர் குற்றப்பிரிவு பழனி மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலமுருகன் கலந்து கொண்டனர்.முதல்வர் பிரியா கருணாநிதி விருந்தினர்களை வரவேற்று கௌரவப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினர் பாலமுருகன் பேசியதாவது
மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வருவது விளையாட்டுப் போட்டிகள் தான் அதனால் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஒலிம்பிக் கொடியை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி பாஸ்கரன் ஏற்றி வைத்தார். மேலும் ஒலிம்பிக் சுடர் சிறப்பு விருந்தினர்களால் ஏற்றப்பட்டது.

மக்கள் தொடர்பு அலுவலர் சையத் ஜஹிருத்தின் ஓட்டப்பந்தய போட்டியை துவக்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.