காட்பாடியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்று கிரிக்கெட் அகாடமியை துவக்கி வைத்தார். சன்பீம் பள்ளி தலைவர் ஹரி கோபாலன் தலமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அகடாமியை துவக்கி வைத்தார். அப்போது ஏராலம பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் வீரர் நடராஜனை சூழ்ந்துகொண்டு அவரிடம் கை கொடுத்தும் ஆட்டோகிராப் வாங்கியும் மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரிக்கெட் வீரர் நடராஜன், வேலூருக்கு நான் வந்தது மிகவும் சந்தோஷப்படுகிறேன். இந்தப் பள்ளியில் கிரிக்கெட் அகாடெமி துவங்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்னை அழைத்ததற்கு பள்ளிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கிராமப்புறத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று நீங்கள் கூறினீர்கள். உலக அளவில் கிரிக்கெட் போட்டிக்கு தான் ஸ்பான்சர்கள் அதிகம். தற்பொழுது கிராமப்புறங்களில் இருந்து வரும் நபர்களுக்கு வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்று செய்தியாளர் கேட்டதற்கு, தமிழ் நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். ஸ்கௌட்டிங் என்ற ஒரு அணியை தமிழ் நாடு முழுவதும் முகாம் அமைத்து சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அதிலிருந்து பல கிரிக்கெட் வீரர்கள் வருகிறார்கள். மேலும் என்னுடைய வேண்டுகோளாக இளைஞர்கள் வருகின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் அனைவருக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது என்றார்.நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது குறித்த கேள்விக்கு, நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்தார்.