இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், தேர்வுக் குழுவும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்தினர். அதில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப்பின், எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு ரோஹித் சர்மா முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு சில முக்கிய திட்டங்களை வைத்துள்ளதாகவும், கேப்டன்ஷிப் மாற்றம் மிக இலகுவாக நடக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளன.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு அடுத்து ஜஸ்பிரீத் பும்ராவை நியமிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று ஒரு நாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.