திருவண்ணாமலையின் திருவிழாவான கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. தீபத் திருவிழாவின் பொழுது அதிகாலையில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும், இதற்கு நெய் மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்கு பக்தர்கள் நன்கொடை வழங்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பாக இணையதளம் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. கார்த்திகை தீப திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் பத்தாம் நாள் அதாவது டிசம்பர் மாதம் 13ஆம் தேதி தீபத்திருவிழா கொண்டாடப்படும்.
திருவண்ணாமலை தீப திருவிழா அட்டவணை
1 – டிசம்பர், 2024 ஞாயிறு அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம் காமதேனு வாகனம் புறப்பாடு.
2- டிசம்பர், 2024 திங்கள் அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம் சிம்ம வாகனம் புறப்பாடு.
3- டிசம்பர், 2024 செவ்வாய் அருள்மிகு விநாயகர் உற்சவம் வெள்ளி மூஷிக வாகனம் சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனம் புறப்பாடு.
4- டிசம்பர் 2024 புதன் நாள் 1 காலை முதல் லக்னம் கொடியேற்றம் (கொடியேற்றம்) பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள். இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி அதிகார நந்தி, ஹம்ச வாகனம் புறப்பாடு.
5- டிசம்பர் 2024 வியாழன் நாள் 2 காலை விநாயகர், சந்திரசேகரர் தங்க சூர்ய பிரபை வாகனம். இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானம் புறப்பாடு.
6- டிசம்பர் 2024 வெள்ளி நாள் 3 காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனம். இரவு பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனம் வெள்ளி அன்ன வாகனம் புறப்பாடு.
7-டிசம்பர் 2024 சனி நாள் 4 காலை விநாயகர், சந்திரசேகரர் நாக வாகனம். இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி காமதேனு, கற்பக விருட்ச வாகனம் புறப்பாடு.
8 – டிசம்பர் 2024 ஞாயிறு நாள் 5 காலை விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனம். இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி பெரிய ரிஷப வாகனம் புறப்பாடு.
9 – டிசம்பர் 2024 திங்கள் நாள் 6 காலை விநாயகர், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனம் 63 நாயன்மார்கள் வீதி உலா. இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள் புறப்பாடு.
தேரோட்டம்:
10 – டிசம்பர் 2024 செவ்வாய் நாள் 7 காலை முதல் லக்னம் விநாயகர் தேர், வடம் பிடித்தல் பஞ்சமூர்த்திகள் மகாராதங்கள் தேரோட்டம் நடைபெறுகிறது.
11 – டிசம்பர் 2024 புதன் நாள் 8 காலை விநாயகர், சந்திரசேகரர் குதிரை வாகனம். மாலை 4.30 மணி பிச்சாண்டவர் உற்சவம் இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனம் வீதி உலா.
12- டிசம்பர் 2024 வியாழன் நாள் 9 காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷ முனி வாகனம். இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனம். வீதி உலா மகா தீபம்.
13-டிசம்பர் 2024 வெள்ளி அதிகாலை 4 மணியளவில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது அதனைத்தொடர்ந்து மாலை 6 மணி மலை உச்சியில் மகா தீபம் (கார்த்திகை தீபம்) ஏற்றப்படுகிறது, இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனம் வீதி உலா நடைபெறுகிறது.
14- டிசம்பர் 2024 சனிக்கிழமை, இரவு 9 மணி ஐயங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்.
15 – டிசம்பர் 2024 ஞாயிறு அதிகாலை அருள்மிகு உண்ணாமூலை உடனுறை ஸ்ரீ அண்ணாமலையார் (அருள்மிகு பெரிய விநாயகர் ) கிரி பிரதக்ஷணம். இரவு 9 மணியளவில் ஐயன்குளத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்.
16- டிசம்பர் 2024 திங்கள் இரவு 9 மணி ஐயங்குளத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம்.
17 – டிசம்பர் 2024 செவ்வாய் இரவு அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனம் புறப்பாடோடு தீபத்திருவிழா முடிவுப்பெறுகிறது.
இதில் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.