திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பக்தர்கள் நேற்று வழிபட்டனர்.
ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் வாழ்ந்த முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர் ரமண மகரிஷியாவார். இவரை சந்தித்த வெளி நாட்டு பக்தர்கள், தங்களுக்கு கிடைத்த ஆன்மிக அனுபவங்களை புத்தகங்களாக வெளியிட்டனர்.
இந்த புத்தகங்களை படிக்கும் வெளிநாட்டினர் அவ்வப்போது திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்வதோடு, அருணாசலேசுவரர் கோயிலில் வழிபடுவர். திருவண்ணாமலைக்கு வந்திருந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று அருணாசலேசுவரரை வழிபட்டனர்.