திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு பகுதிகளை சேர்ந்த கிராமிய இசை கலைஞர்கள் இணைந்து பம்பை, உடுக்கை, கைசிலம்பு கலைக்குழு நலச்சங்கம் தொடக்க விழா திருத்தணியில் நேற்று நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஆஞ்சிநேயன் தலைமை வகித்தார். விழாவில் 100-க்கும் மேற்பபட்ட கலைஞர்கள் பங்கேற்று காந்தி ரோடு பகுதியில் பம்பை, உடுக்கை, கைசிலம்பு முழங்கி நடனமாடி ஊர்வலமாகச் சென்றனர். காந்தி ரோடு திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் கலைக்குழு நலச்சங்க தொடக்க விழா நடந்தது.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பூபதி பங்கேற்று திறந்து வைத்தார்.நகராட்சி கவுன்சிலர்கள் குமுதா கணேசன், ரேவதி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலைக்குழு துணைத் தலைவர் சுகசிவம், செயலாளர் பால முருகன், துணைசெயலாளர் சண்முகம், பொருளாளர் ராஜ்குமார், துணை பொருளாளர் ஆறுமுகம் அட்பட நாட்டுபுற கலைஞர்கள் பங்கேற்றனர்.