வரும் 8ம் தேதி மகா ரத தேர் வெள்ளோட்டத்தின் போது மாட வீதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திரு கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு நெய் காணிக்கை செலுத்தும் கவுண்டரை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்தார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பத்து நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மழையே சிவனாக காட்சி அளிக்கும் 2668 அடி அருணாச்சலேஸ்வரர் மலை உச்சியில் டிசம்பர் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். ஆன்மீக பக்தர்கள் மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை அவர் அவர்கள் விருப்பத்திற்கு தகுந்தார் போல் வழங்குவார்கள்.
அதேபோல் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கோவில் நான்காம் பிரகாரம் அருகில் இந்து அறநிலையத்துறை அலுவலகம் அருகில் திருக்கார்த்திகை தீப நெய்குட காணிக்கை செலுத்தும் கவுண்டர் ஓபன் செய்யப்பட்டு நெய் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு நெய் காணிக்கை செலுத்தும் கவுண்டரனை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார்.

இந்த ஆண்டு நெய் காணிக்கை கிலோ 250 ரூபாய்க்கும் அரை கிலோ 150 ரூபாய்க்கும் 1/4 கிலோ 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீப விழா தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கோயில் உள்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார்.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின்போது அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு துறை வாரியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளதாகவும், இதில் முக்கிய நிகழ்வாக 6ம் நாள் உற்சவமாக வெள்ளி ரதம், 7ம் நாள் உற்சவத்தில் மகா ரதங்கள் மாடவீதியில் வலம் வர உள்ளதாகவும், 10ம் நாள் உற்சவத்தன்று 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், அடிப்படை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உணவு வசதிகள் என அனைத்தும் தயார் செய்ய வேண்டும் என்றும், திருவிழாவின் போது மாட வீதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் ஆய்வு நடத்தப்படும் என்றும்,
கடந்தாண்டு திருவிழாவின் போது என்னென்ன சிரமங்கள் ஏற்பட்டதோ அதை தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் பரணி தீபத்தன்று 7500 பேரும், மகா தீபத்தைப் பேரும் 11,500 பேர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 2000 பக்தர்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். குறிப்பாக வரும் 8ம் தேதி மகா ரத தேர் வெள்ளோட்டத்தின் போது மாட வீதிகளில் மின்னிணைப்புகள் துண்டிப்பு செய்யப்படும் என்றும், ஆன்லைன் மூலம் பரணி தீபத்திற்கு 500 பேருக்கும், மகா தீபத்திற்கு 1100 பேருக்கும் கட்டண டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேட்டி அளித்தார்.