கரூர் அருகே அசாமை சேர்ந்த பெண்ணை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அசாம் மாநிலம் கப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுபோல் முர்மூ (32). கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் சுபோல் முர்மூ வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே நிறுவனத்தில் பணிபுரியும் அசாம் மாநிலத்தை சேர்ந்த சசிபூர் சிந்தாமணி பரோ (44) என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது.
சுபோல் முர்மு, மீண்டும் சொந்த மாநிலம் செல்வதாக சிந்தாமணி பரோவிடம் கூறியுள்ளார்.
சிந்தாமணி பரோ தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சுபோல் முர்மூவிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சிந்தாமணி பரோவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். வேலாயுதம் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி சுபோல் முர்மூவை கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட சிந்தாமணி பரோவிற்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.