இந்தியா – பாகிஸ்தான் இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தில் அதிகாரிகள் உள்பட பல ராணுவ வீரர்கள் ராஜினாமா கடிதங்களை ராணுவ தளபதிக்கு அனுப்பி இருப்பது பாக்., ராணுவத்திற்கு பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. மேலும் இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடந்து வருகிறது. இரு நாடுகள் இடையே போர் ஏற்படுமோ என்ற சூழல் உருவாகி உள்ளது.
மண் அழுத்தம் ஏற்படுவதாக வீரர்கள் விளக்கம்
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தில் பல அதிகாரிகள் , வீரர்கள் ராஜினமா செய்துள்ளனர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், 500 ராணுவ வீரர்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை ராணுவ தளபதி செய்யது ஹசீம் முனீருக்கு அனுப்பி உள்ளனர்.
ராணுவ தளபதிகளின் முன்னுக்குப்பின் முரணான உத்தரவுகள், மனஅழுத்தம், மற்றும் பல்வேறு காரணங்களால் ராணுவ வீரர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதட்டம் ஏற்படுத்துவதை சில வீரர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ராணுவத் தளபதிகள் தெளிவான வழிமுறைகளை வழங்கத் தவறிவிட்டனர். இது குழப்பத்தையும் , பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். வீரர்களின் ராஜினாமாவால் பாகிஸ்தான் ராணுவ வட்டாரத்தில் ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் உமர் அகமது புகாரி தலைமையில் இயங்கும் 11வது படைப்பிரிவு, இந்திய-பாகிஸ்தான் எல்லையின் பாதுகாப்பிற்கு முக்கிய பொறுப்பாக விளங்குகிறது. புகாரி 2024 முதல் இந்தப் படையை வழிநடத்தி வருகிறார். இந்த மோசமான நிலைமை குறித்து லெப்டினன்ட் ஜெனரல் புகாரி ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்குத் தெரிவித்தார்.
ராணுவ தலைமை கடும் எச்சரிக்கை
இதற்கு ராணுவத் தலைமையகம் கடுமையாக எச்சரித்துள்ளது. ராஜினாமா செய்யும் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரத்தில் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், இது இராணுவ விதிகளை மீறுவதாகும் என்றும் ராணுவ தளபதி அலுவலக தரப்பில் கூறப்பட்டுள்ளது.