சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டியதால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனம் தான் உலகின் மிகவும் வறண்ட பாலைவனம். பல கொடிய விஷம் மிகுந்த ஊர்வன உயிரினங்களைக் கொண்டது. சஹாராவில் பெய்த திடீர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு வாய்ப்பே இல்லாத வறண்ட பகுதியான சஹாராவில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.
இந்த பெரு மழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள இரிக்கி என்ற வறண்ட ஏரி நிரம்பி விட்டது. இந்த வறண்ட ஏரி, சஹாராவில் ஜகோரா – டாடா மணல் படுக்கைகளுக்கு இடையே உள்ளது. அப்படி இருந்தும், அதிக மழை வெள்ளத்தால் ஏரி நிரம்பியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கனமழையால் மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.