மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு பாதுகாப்பு படைகளில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையும் ஒன்று. இந்த படை விமான நிலையங்கள் மற்றும் மத்திய அரசு திறுவனங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. இது தவிர முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் புதிய தலைமை இயக்குனராக பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான நினா சிங் நேற்று பொறுப்பேற்றார். இந்திய வரலாற்றில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனராக பெண் ஒருவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.
ராஜஸ்தானை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி நினா சிங் 2021ஆம் ஆண்டு மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் இணைந்தார். மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனர் ஷீல் வர்தன் சிங் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி ஓய்வு பெற்றது முதல் தினா சிங் பொறுப்பு தலைமை இயக்குனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.