விழுப்புரம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஐ.டி. கம்பெனி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் வயது 32, பெண்னுக்கு செஞ்சி அருகே களையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் சுகுமாறன் (37) சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகின்றார். இவர்கள் இருவரும் 12 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சுகுமாறன், அந்த பெண்ணிடம் திரும ணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்துள்ளார். சுகுமாறனிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்தப் பெண் கேட்டதற்கு சுகுமார் மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து அப்பெண்.கடந்த 5.3.2018 அன்று சுகுமாறன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது சுகுமாறனும், அவரது தந்தை ஏழுமலை (74), தாய் ராதா (68) ஆகியோர் சேர்ந்து அந்த பெண்ணை திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமாறன், ஏழுமலை, ராதா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ் குற்றம் சாட்டப்பட்ட சுகுமாறனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக அரசு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும், ஏழுமலை, ராதா ஆகிய இருவரையும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுகுமாறன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.