ஒ. ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் உள்ள ஆரணி கூட்ரோட்டில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
நகரச் செயலாளர் விஸ்வநாதன் வரவேற்று பேசினார் சிறப்பு பேச்சாளர்களாக திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி மற்றும் தலைமை கழக பேச்சாளர் திருச்சி சேகர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றனர்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.