போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு அதிகாலை முதல் அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்றுது.
தம்பதி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, தனபூஜை, மஹா அபிஷேகம், அஷ்ட பந்தனம் சாற்றுதல், நாடி சந்தானம், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மகாபூர்ணாவதி, தத்வர்ச்சனை, யாத்ரா தனம், கடம்புறப்பாடு, விமானம் மற்றும் மூலஸ்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது
இறுதியாக கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களான பேட்டை, திருசூர், வசூர், புதுப்பாளையம், மாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இறுதியாக கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.