நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை
நாகை திருவாரூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக வீட்டின் சுவர் இடித்து விழுந்த்தில் சிறுமி மூதாட்டி உயிரிழந்தனர். வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரு மாணவரும் உயிரிழந்தார்.
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் ஒத்தவீடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
மகன் மோகன்தாஸ் (வயது 11). மகள் மோனிஷா (9) 4-ம் வகுப்பு படித்து வந்தாள். நன்னிலத்தில் பலத்த மழை பெய்ததில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த மோகன்தாஸ் மற்றும் மோனிஷா மீது விழுந்தது. மகன் – மகளின் அலறல் சத்தம் கேட்டு கண் விழித்து பார்த்த ராஜசேகர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது மகன் மற்றும் மகளை மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சிகிச்சைக்காக மோனிஷாவை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிஷா இறந்தாள் நனிலம் அரசு ஆஸ்பத்திரியில் மோகன்தாஸ் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி விச்சூர் காலனித்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி மணியம்மாள் (வயது 60). நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடிசை வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். நேற்று அதிகாலை 4 மணியளவில் பெய்த பலத்த மழையால் அவரது வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த மணியம்மாள் மீது விழுந்தது. மணியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மணியம்மாளை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மணியம் மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கூரை இடிந்து விழுந்தது நாகை மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சி, பழையனூர் மேல்பாதி மேலத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான காலனி வீடு அதே பகுதியில் உள்ளது. நன் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்வதற்கு
தனது உறவுக்கார சிறுவர்களான 10 வகுப்பு படிக்கும் பழையனூர் மேல்பாதியை சேர்ந்த சண்முகம் மகன் அஜிஸ் (வயது 15) அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் மகன் நரேஷ் (13), மணிகண்டன் மகன் லிவின்ராஜ் (12) மற்றும் புலியூர் மேலத் தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் வெற்றிவேல் (13) ஆகியோர்களை அழைத்து நேற்று மதியம் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
எதிர்பராத விதமாக காலனி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது இதில் 4 சிறுவர்களுக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அந்த 48 வர்களையும் மீட்டு 108 ஆம்லன்ஸ் மூலம் சிகிச்சைக்கா நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசேதித்த டாக்டர்கள் அஜிஸ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். மற்ற 3 சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருகின்னர்.
இது குறித்து கீழ்வேளூ போலீசார் வழக்குப்பதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.