தூத்துக்குடியில் சொத்து தகராறில் பயங்கரம்
சொத்து தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். காரில் கிடந்த தாயாரின் உடல் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி சக்தி விநாயகபுரம் 1 வது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிபிச்சை. இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 67). இவர்களுடைய மூத்தமகன் அந்தோணி டெரிசன் (46), சென்னையில் வசித்து வருகிறார்.
2வது மகன் ரூபேசன் (40), டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத் தினருடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தோணிபிச்சை இறந்து விட்டார். இதனால் கலைச்செல்வி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
தூத்துக்குடியில் கடந்த மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ரூபேசனின் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. எனவே குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறிய ரூபேசன், தாயார் வீட்டின் மாடியில் குடும்பத்துடன் வசிக்க திட்டமிட்டார். இதற்கு தாயார் கலைச்செல்வி அனுமதிக்க மறுத்து விட்டார். எனவே, வீட்டை விற்று தனக்கு பணம் தருமாறு ரூபேசன் தாயாரிடம் கேட்டார் இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மாலையில் ரூபேசன் தனது உறவினரான தருவை குளத்தைச் சேர்ந்த மீனவர் சூசை அந்தோணிராஜ் (34) என்பவருடன் மது போதையில் காரில் தாயாரின் வீட்டுக்கு சென்றார். அங்கு தாயார் கலைச் செல்விக்கும், ரூபேசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரூபேசன், பெற்ற தாயார் என்றும் பாராமால் கைகளால் சரமாரியாக | கலைச் செல்வியை அடித்ததாக கூறப்படுகிறது.இதில் அவரது தலையில் இருந்து. ரத்தம் கொட்டியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரூபேசன், சூசை அந்தோணிராஜ் ஆகிய 2 பேரும் கலைச் செல்வியை காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். காரில் கிடந்த உடல் இதனால் அதிர்ச்சி அடைந்த ரூபேசன், சூசை அந்தோணிராஜ் ரூபேசன் ஆகிய 2 பேரும் கலைச் செல்வியின் உடலுடன் காரிலேயே அப்பகுதியில் சுற்றி திரிந்தனர். பின்னர் இரவில் கலைச்செல்வி உடலுடன் காரை அவரது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தப்பி சென்றனர்.
நேற்று முன்தினம் காலைய காருக்குள் கலைச்செல்வி பிணமாக கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த கலைச் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் கைது
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரூபேசன், சூசை அந்தோணிராஜ் ஆகிய 2 பேரையும் பிடித்து கைது செய்தனர். தூத்துக்குடியில் சொத்து தகராறில் தாயை மகனே அடித்துக் கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.