மது விற்பனை ரூபாய் 39 கோடிக்கு எட்டியது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 208 டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது.
கடந்த 12-ந் தேதி மதுபான கடைகள் விஸ்கி, பீர், ரம், பிராந்தி உள்ளிட்ட மது வகையான மதுபானங்கள் ரூ.4கோடியே 53 லட்சத்து 19 ஆயிரத்து 30 விற்பனையாகியுள்ளது.
அதேபோல் கடந்த 13-ம் தேதி அன்றைய தினத்தில் ரூ.5 கோடியே 67 லட்சத்து 75 ஆயிரத்து 030 விற்பனை ஆகி உள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தினத்தில் மது பிரியர்களுக்காக மதுபானங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டது
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி போகி பண்டிகை முன்னிட்டு மதுபான கடைகளில் ரூ. 8 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 450 ரூபாயும்
இதே போல் கடந்த 15-ம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரூ.12 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரத்து 570 ரூபாயும்
16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 17-ம் தேதி காணும் பொங்கல் தினத்தன்று ரூ. 8 கோடியே 89 லட்சத்து 33 ஆயிரத்து 870 ரூபாய் விற்பனையாகி உள்ளது.
கடந்த ஐந்து தினங்கள் மட்டும் டாஸ்மார்க் கடையில் ரூபாய் 39 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.