இந்தியாவில் தங்க நகை என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஏடிஎம் ஆகும். அவசர பணத்தேவைக்கு தங்க நகைகளை அடமானம் வைத்தே சமளிப்பார்கள்.
இதில் தனியார்களை விட வட்டி குறைவு என்பதால் பொதுத்துறை வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளை பொது மக்கள் நம்பிக்கையாகும். குறிப்பிட்டு செல்லவேண்டும் என்றால் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள் அவர்களின் ஆபத்பாந்தவன். இந்த விஷயத்தில் நாடு முழுவதும் ஒரே வித போக்குத்தான் நிலவுகிறது.
இந்த நகைக்கடனுக்குத்தான் ரிசர்வ் வங்கி வேட்டு வைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நகை கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. இந்த விதிமுறைகள் வங்கிகளை தாண்டி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
சென்ற ஆண்டு செப்டம்பரில் இருந்து தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் உள்ளது. தங்கத்தின் விலைகள் ஏறியதால், பல தனிநபர்கள் நகைகளை அடமானம் வைக்க தொடங்கினர். இந்த போக்கு தங்க நகை கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையில் ஏற்றத்திற்கு வழிவகுத்தது,
இந்த நிலையில் வங்கிகளில் நகைக்கடன் வாங்குவதற்கான விதிமுறைகளில் கடும் கட்டுப்பாடுகைள விதிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதன்படி நகை கடன் வாங்கியவர்கள் கால அவகாசம் முடிந்ததும். அசலுடன் வட்டியை சேர்த்து கொடுத்து நகையை மீட்டு மறுநாள்தான் மீண்டும் அடமானம் வைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் ஏழை எளிய மக்கள் நகை கடன் பெறுவதில் கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகும். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, குறைந்த வட்டியில். பாதுகாப்பான மற்றும் நம்பகமான கடன் பெறும் வழியாக இருந்த வங்கி நகை கடன் முறை பொதுமக்களுக்கு கடினமானதாக மாறிவிடும்.
நகை கடன் வாங்கியவர்கள் காலஅவகாசம் முடிந்ததும் மொத்த பணத்தையும் கொடுத்து நகையை மீட்டு, மீண்டும் புதியது போலத்தான் அடகு வைக்க முடியும். அதுவும் மறுநாள் தான் அவ்வாறு அடகு வைக்க முடியும் என்பதால் இது ஏழை, எளிய மக்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அசலுடன், வட்டியும் கட்டும் அளவுக்கு பணமும் இருந்தால் உடனடியாக வங்கியில் செலுத்திவிட்டு நகையை மீட்டு கொள்வார்கள்.
ஆனால் தற்போது புதிய நிபந்தனையால் வெளியில் வட்டிக்கு வாங்கியாவது நகையை மீட்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுவார்கள். இதுவரை வட்டி மட்டும் கட்டி வந்து கால அவகாசம் ஒரு ஆண்டு அல்லது 6 மாதம் நிறைவு பெற்றதும் ஒரே நாளில் அதனை மறுஅடகு வைத்து விடலாம்.
ஆண்டு தோறும் வட்டி மட்டும் கட்டிவிட்டு கடனை புதுப்பித்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
ஏழை மக்கள் அடகு கடைகளை தேடிச் செல்லும் நிலை ஏற்படும். இது போன்ற விதிமுறைகளால் வங்கிகளில் நகை கடன் பெறுபவர்கள் எண்ணிக்கை குறையும். ஏழை, எளிய மக்களுக்கு மீண்டும் பழைய நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.