நேற்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்த தவெக கொடி யானை சின்னம் தொடர்பான வழக்கு மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தவெக கொடியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் யானை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நடிகர் விஜய், ‘தமிழகம் வெற்றிக் கழகம்’ எனும் கட்சியைத் துவக்கி 2026 தேர்தலுக்கு தயாராகிவருகிறார். இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சி தீவிரமாக செய்துவரும் நிலையில், தவெக கட்சிக் கொடியில் இடம் பெற்றிருக்கும் யானை சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.
தவெக கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருக்கிறது. இதனை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றுவருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகப் பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி என்றும், தங்கள் கட்சி சின்னமான யானையை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது.
எனவே அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது என்றும், எனவே தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அந்த வழக்கு விசாரணை மீண்டும் வந்தது. ஆனால், நேற்று நீதிபதி விடுமுறை என்பதால், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.