அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான உள்ளார். தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார்.
இந்நிலையில் ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வீட்டில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.