வேலூரில் உள் விளையாட்டு அரங்கத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில் சுமார் 8 கோடியே 65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உள் விளையாட்டு மைதானத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் குற்றுவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். பின்னர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாரும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்தும் செட்டில் கார்க் விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.