திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் ஊழியரை தவறாக பேசிய கோயில் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மேற்பார்வையாளராக சதீஷ் பணியாற்றி வருகிறார். இவர் கோயிலில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவரிடம் தவறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக அந்த பெண் குற்றம் சாட்டினார்.
இது குறித்த ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அந்த ஆடியோவில் கோயில் ஊழியர் ஒருவரிடம் தூய்மை பணியாளர் வேலைக்கு சேர நான்கு லட்ச ரூபாய் கொடுத்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் குறித்து கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் இணை ஆணையர் ஆகியோர விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண் ஊழியரிடம் மேற்பார்வயைாளர் சதீஷ தவறாக பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சதீஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும இதுகுறித்து இருவரிடமும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும். விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.