மூத்த விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை என அழைக்கப்படும் சிவதாணுப் பிள்ளை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவருக்கு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுடைய நிலைமை மாறி வாட்ஸ்அப்பிலேயே உள்ளனர். ஒவ்வொரு மாற்றத்தையும் ஆய்வு செய்து விஞ்ஞானியாக மாறுகின்றனர். 2000 வருடங்களுக்கு முன்பு நம்முடைய அறிவியல் வளர்ச்சி வேகமாக இருந்தது. அன்று அறிவியல் தொழில்நுட்பத்தை மக்கள் செய்து கொண்டிருந்தனர்.
தெய்வீக தன்மையின் காரணமாக அவர் செய்தனர். அந்த தெய்வீக தன்மையும் சேர்ந்தால்தான் நாம் பெரிய காரியங்களை செய்ய முடியும். அதற்கு இந்த விருத்தாசலம் சுவாமி அருள் புரிய கூடியவர். இப்பொழுது இருக்கக்கூடிய இளைஞர்கள் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரரை வணங்கி விட்டு அவர்களுடைய வேலையை தொடர்ந்தால் பெரிய பெரிய முன்னேற்றங்களை அடைய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கோவில் மேலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.