திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :
வரும் 28-ந் தேதி புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் ரோடு, சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கூட்டம் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன்.எம்.பி., ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில், மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி உறுப்பினர் சேர்த்தல், கழகத்தின் முப்பெரும் விழா மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
ஏனவே, ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் வலைதளப் பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.