தவெகவின் இரண்டாம் ஆண்டு விழாவில் அதன் தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறாராம்.
சென்னை, மாமல்லபுரத்தில் தவெகவின் இரண்டாம் ஆண்டு விழா இந்திரு நடைபெறுகின்ற நிலையில் நட்சத்திர விடுதியின் முகப்பில் வரவேற்பு தோரணை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடக்கிறது. இதில் சுமார் 2500 முதல் 3000 நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் தவெகவினர் பேனர்களை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் விழா நடைபெறும் நட்சத்திர விடுதி முழுவதும் பவுன்சர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, ஓட்டல் ஊழியர்களைத் தவிர, தோரண நுழைவு வாயிலைத் தாண்டி பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த 2ம் ஆண்டு விழாவில், தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சூராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் பங்கேற்று பேச இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறும் தவெகவின் 2ம் ஆண்டு விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது.
வாசனை தூக்கும் அசைவம் மற்றும் சைவ விருந்து
மேலும் விழாவில் பங்கேற்கும் கட்சினருக்கு சைவ உணவுகள் மற்றும் மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன், கோழி வறுவல், இறால் தொக்கு போன்ற அசைவ உணவுகளும் பரிமாறப்படவுள்ளன.