மதுரை கே.கே.நகர் ஸ்ரீ மழலையர் பள்ளியில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நான்கு வயது குழந்தை ஆருத்ரா பலியான சம்பவம் தொடர்பாக, பள்ளி உரிமையாளர் திவ்யா கைது செய்யப்பட்டார்.
மதுரை கே.கே.நகர் பகுதியில், ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது 4 வயது சிறுமி, திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.
30 நிமிடத்திற்கும் மேலாக தண்ணீர் தொட்டியில் பரிதவித்த சிறுமியை, அங்கிருந்தவர்கள் மீட்டனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்..
இந்த சம்பவம் தொடர்பாக, மழலையர் பள்ளி ஆசிரியர்களிடம் மதுரை மாநகர துணை கமிஷனர் அனிதா விசாரணை நடத்தினார். இதில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி உரிமையாளர் திவ்யா பத்ரிலட்சுமி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
பள்ளிக்கு சீல்
பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால், குழந்தை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதால் பள்ளிக்கு சீ்ல் வைக்கப்பட்டுள்ளது.