அதிமுக எம்எல்ஏக்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்து வைக்க இருப்பதாகவும், அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில், ஏப்ரல் 23ம் தேதி அன்று விருந்து நடைபெறு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, அதிமுக தற்போது சுறுசுறுப்பாக தேர்தலுக்கு முந்தைய பணிகளை கவனித்து வருகிறது. ஏற்கனவே பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்துவிட்ட எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஏப்ரல் 23ம் தேதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து வைக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. எம்எல்ஏக்கள் வரும் தேர்தலுக்கு தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும், வெற்றி பெற வியூகங்களை சிறப்பாக வகுக்க வேண்டும் என்பதற்காகவும், எம்எல்ஏக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மே 2ஆம் தேதி அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமும், செயற்குழு கூட்டத்துக்கு வருபவர்களுக்கு சிறப்பான விருந்து அளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.