மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்துள்ள நிலையில், இரட்டை இலை வழக்கு இறுதி விசாரணைக்கு தேர்தல் ஆணையத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு இருபிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியுள்ள நிலையில், தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக பாஜகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மறுபுறம் அதிமுக, பாஜக கூட்டணிக்குள் வர ஓபிஎஸ், டிடிவி தினகரன் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பதால் பாஜகவுக்கு அதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. அதிமுகவில் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நிர்மலா சீதாராமனை டெல்லியில் ஒருமுறை, சென்னையில் ஒருமுறை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இவையெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்தான் நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக முடிவு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். அவரை சந்திப்பதற்கு இபிஎஸ், ஓபிஎஸ், செங்கோட்டையன், பாமக செயல் தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலர் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இரட்டை இலை சின்னம் மீதான இறுதி விசாரணையை தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த 15 மனுக்கள் மீதான விசாரணை, சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி நடந்து வருகிறது. இந்த வழக்குகள் முடியும் வரை சின்னத்தை முடக்க ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று அமித்ஷாவுடன் அதிமுக உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்களும் சந்திக்கும் நிலையில், இந்த சந்திப்புக்கும், இரட்டை இலை சின்ன விசாரணைக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசபப்டுகிறது. அட ஆமாங்க..குருவி உட்கார னம்பழம் விழுந்த கதைபோல அமித்ஷா வருகையின்போது மிகச் சரியாக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டிக் கழித்துப் பாருங்கள், தேர்தல் ஆணையம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று புரியும்.