நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது, தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியே பதில் ஆகும்.
தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 132 பேர் இருக்கிறார்கள். 66 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் கூட அ.தி.மு.க.வுக்குத்தான் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.