சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ வேணுவின் இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் முன்னாள் எம்எல்ஏ கி.வேணு. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளுடன் கூறாத நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தேர்தலுக்காகவோ, பதவிக்காகவோ உருவாகாமல் கொள்கைக்காக உருவாக்கப்பட்டது திமுக கூட்டணி.
திமுக கூட்டணி கட்சிகளுக்குள் விவாதம் தான் உள்ளதே தவிர விரோதம் இல்லை.திமுக ஆட்சியை நினைத்து எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை.செல்லா காசாக உள்ள எடப்பாடி பழனிசாமி பொறாமையில் தான் திமுக அரசு சரிந்து கொண்டிருக்கிறது என கூறுகிறார்.
தனது கட்சியில் உள்ள குழப்பங்களை சரிசெய்ய முடியாமல் திமுகவை குறை கூறுகிறார் இபிஎஸ்.கனவு காண வேண்டாம், 2026ல் மட்டுமல்ல அதனை தொடர்ந்து வரும் அத்தனை தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறும் என்று கூறினார்.