பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும், உயர் அதிகாரியின் முன் அனுமதி பெறாமல் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுவதாகவும் புகார்கள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை சார்பில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு அதிரடி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
அந்த சுற்றறிக்கையில், பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள் பணிக்கு தாமதமாக வருவதையும், உரிய அதிகாரியிடம் அனுமதி பெறாமல் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பல்கலைக்கழகங்கள் சுமுகமாக செயல்படும் வகையில் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் வருகையை உறுதி செய்வதற்காக பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை பல்கலைக்கழக நிர்வாகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.