தமிழக அரசுப் போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை மாநகர், சென்னை, கோவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, நெல்லை ஆகிய 8 போக்குவரத்து கழகங்களில், டிரைவர், கண்டக்டர் உள்பட 3,274 காலிப் பணியிடங்கள் உள்ளன.
இந்தத் தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை http://arasubus.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
வயது
குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பொது வகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் 45 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும் மற்றும் இதர வகுப்பினர் 55 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
முக்கிய தகுதி
கனரக வாகன ஓட்டுநர் உரிமம், குறைந்தபட்ச 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவி சான்று, பொதுப்பணி வில்லை மற்றும் நடத்துநர் உரிமம் 2025ம் ஆண்டு ஜன.,1க்கு முன்பாக பெற்றிருக்க வேண்டும்.
உயரம் மற்றும் எடை
உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீட்டரும், எடை குறைந்தபட்சம் 50 கிலோ கிராம் இருக்க வேண்டும்.
உடல் தகுதி
தெளிவான குறைபாடுகளற்ற கண்பார்வை பெற்றிருத்தல் வேண்டும். எவ்விதமான உடல் அங்க குறைபாடுகள் அற்றவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்
எஸ்.சி.,/ எஸ்.டி ரூ.590 கட்டணம் (18% ஜி.எஸ்.,டி உள்பட) கட்டணமாகவும், இதர பிரிவினர் ரூ.1,180 (18% ஜி.எஸ்.,டி உள்பட)கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.