வந்தவாசியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் தேரடி தபால் தந்தி அலுவலகம் முன் வட்டார செயலாளர் அப்துல் காதர் தலைமையில் நூதன முறையில் தண்டோரா போட்டும், பலூன்களை ஊதி காற்றில் பறக்க விட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பட்ஜெட்டில் முற்றிலுமாக தமிழகதிற்கு எந்த வகையிலும் நிதி ஒதுக்கீடு இல்லை, புதிய திட்ட அறிவிப்பு இல்லை.
இதனால் பா.ஜ.க ஆளாத மாநிலமான தமிழகம் மற்றும் கேரளா புறக்கணிக்கப்பட்டுள்ளது எனக்கூறி கிராமப்புறத்தில் அறிவிப்பு செய்வதுபோல் தண்டோரா போட்டு, பலூன்களை ஊதி காற்றில் பறக்கவிட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன், கரும்பு விவசாயிகள் மாநில நிர்வாகி ஹரிதாசு ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் யாசர்அராபத், சுகுணா, இடைக்குழு உறுப்பினர் சுகுமா,ர் நகர செயலாளர் ராதா கிருஷ்ணன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைசெயலாளர் ரேணுகா, ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் திலகராஜ், வெங்கடேசன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.