காஞ்சிபுரம் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் பயிற்சியாளர் ஆர் சந்துரு தலைமையில் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான இன்டர்னல் கிக் பாக்சிங் போட்டியில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் கலந்துகொண்ட காஞ்சிபுரம் மாணவர்கள் கதிர்பாட்ஷா, சிவசெல்வன், நவீன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதில் கதிர்பாட்ஷா 2 தங்க பதக்கங்களும், சிவசெல்வன் 2 தங்கப் பதக்கங்களும், நவீன்குமார் 2 வெள்ளி பதக்கமும் பெற்று வெற்றிபெற்றனர்.
இந்நிலையில் பதக்கம் வென்ற மூன்று மாணவர்களுடன் பயிற்சியாளர் சந்துரு ஆகியோர் காஞ்சிபுரம் வருகையையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள செவிலிமேடு பகுதியில் வந்தவாசி செல்லும் கூட்டு சாலையில் இருந்து பல்வேறு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என காத்திருந்து சாதனை மாணவர்களை பேண்ட் வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கைகளுடன் திறந்த ஜீப் காரில் ஊர்வலமாக வீடு வரை சென்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட கேக்கினை வெட்டி வெற்றியை கொண்டாடினர்.