வேடசந்தூரில் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் 2 பேரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பாபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் இரு சமுதாய அமைப்புகளின் சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வரும் 4ம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கான போஸ்டரை ஆத்துமேடு ராஜகோபாலபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 30), அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 30) என்ற கூலித் தொழிலாளர்கள் சுவற்றில் ஒட்டியுள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் வேடசந்துர் காவல்நிலையம் சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபால் அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.
இத்தகவல் அறிந்த இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில், இந்து முன்னணியினரும், வ.உ.சி மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் முருகேசன் தலைமையிலும், ஒக்கலிகர் இளைஞர் பேரவை அமைப்பின் தலைவர் முருகேசன் தலைமையிலும் ஏராளமானோர் கூடினர்.
பின்னர் போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும், போலீசாரை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.
இதனைத்தொடர்ந்து போலீசார் சமரம் செய்த பின்னர் அங்கிருந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.