விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தன்னை தாக்கியதாக சமீபத்தில் புகார் எழுப்பிய காரைக்குடி பெண் எஸ்.ஐ பிரணிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தனிப்பட்ட பிரச்சனை காரணமாக விசிக நிர்வாகியை பழி வாங்கவும், தன்னுடைய டிரான்ஸ்பர் ஆர்டரை ரத்து செய்யவும் அவர் நாடகமாடியது சிவகங்கை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உறுதியானதால் தற்போது அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.