காஞ்சிபுரத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கான பணி இன்று (புதன்கிழமை) முதல் 15-ம் தேதி வரை காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டுத்திடலில் நடைப்பெறவுள்ளது.
ஆர்வமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in இணையதளம் வாயிலாக விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண் 0416 2290042 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்திய இராணுவ ஆட்சேர்ப்புக்கான முகாமில் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை ஒரு செய்திக்குறிப்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.