கடலூர் மஞ்சக்குப்பத்தில் சாலையோரத்தில் கிடந்த மனித எலும்புகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை அருகே சாலை ஓரத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் மனித எலும்புக்கூடுகள் கிடந்தன. இதுகுறித்து புது நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த காவல்துறையினர், எலும்புக்கூடுகளை துப்புரவு தொழிலாளர்கள் மூலம் அகற்றப்பட்ட மனித எலும்புகளை விசாரணைக்காக சாக்குப் பையில் எடுத்துச் சென்றனர்.
சாலை ஓரத்தில் எலும்பு கூடுகளின் அருகே மஞ்சள் குங்குமம் ஆகியவை பிள்ளையார் பிடித்து வைக்கப் பட்டிருந்ததால் மாந்திரீகம் செய்யப்பட்டதா? அல்லது எதற்காக இங்கே வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
முதன்மைச் சாலையின் அருகே மனித எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.