கடலூர் அருகே முந்திரி மரங்களை அரசு அகற்றியதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றியம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான மலையடி குப்பம், கொடுக்கன் பாளையம், வானமாதேவி, வெள்ளக்கரை, தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி ஆகிய கிராமப் பகுதிகளில் மக்கள் கடந்த நூறாண்டுகளாக 65.75 ஹெக்டேர் நிலத்தை பயன்படுத்தி பண்படுத்தி முந்திரி பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இதற்கு முன்பு இதே இடத்தில் சேர்ந்ததுபோல் இருந்த 14 ஹெக்டேர் நிலத்தை விவசாயிகளுக்கு அரசு பட்டா போட்டு கொடுத்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, விளைநிலம் இல்லாத விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் கொடுக்கும் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்டது.
கடந்த 2006 இல் விடுபட்டவர்களுக்கு மீண்டும் 2016 ஆம் ஆண்டு பட்டா கொடுக்க முயற்சிகள் நடந்து வந்தது. ஆனால் தற்போது வரை பட்டா வழங்கவில்லை.
இதற்கிடையில் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க இடம் அளிக்கப்படும் என்று அறிவிப்பின்படி, இந்த இடத்தை தேர்வு செய்து நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மக்களை வெள்ளக்கார ஊராட்சியை சேர்ந்த முந்திரி விளையும் இந்த இடத்தில் வீடுகள் கட்டி வாழும் கிராம மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் கடந்த நான்காம் தேதி அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வருவாய் துறை அலுவலர்கள் நோட்டீஸ் விநியோகித்து உள்ளனர். இதனால்அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த நோட்டீசில், வருவாய் துறையினரால் விநியோகிக்கப்பட்ட நோட்டீசில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியும், முந்திரி விவசாயம் உள்ளிட்ட வேளாண் பணிகளை செய்து வருகிறீர்கள்.
வரும் 15 நாட்களுக்குள் ஆக்கிரமித்த இடங்களை காலி செய்து தராவிட்டால், அரசே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் எந்த நேரத்திலும் தங்கள் வீடுகள் நூறாண்டுகளாக வளர்த்து முந்திரி மரங்கள் பொக்லின் எந்திரங்களின் மூலம் இடிக்கப்படலாம். மரங்கள் வெட்ட படலாம் விவசாயம் அழிக்கப்படலாம் என்று அஞ்சிய பொதுமக்கள் மலையடி குப்பம் கிராமத்தில் சமையல் பாத்திரங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை கடலூர் சார் ஆட்சியர் அபிநயா தலைமையில், தாசில்தார் பலராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் அப்பகுதி கிராமங்களுக்கு சென்று நிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் முந்திரி தோப்புகளை பொக்லைன் மூலம் அகற்றுவதற்காக 5-க்கும் மேற்பட்ட பொக்லைன்களும் வர வைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

மேலும் பாதுகாப்புக்காக இரண்டு டிஎஸ்பிகள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனால் பெரும் அச்சமடைந்த ஊர் பொதுமக்கள், அப்பகுதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு எங்களின் வாழ்வாதாரங்களை நீங்கள் அழித்து விடாதீர்கள். இதனை நம்பித்தான் கடந்த 100 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம் என்று கதறி அழுதனர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தப் போராட்டத்தில் மக்களுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட பாமக கடலூர் விளக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி, ரவிச்சந்திரன், சரவணன், ராஜேஷ், கண்ணன் உள்ளிட்டோர் சார் ஆட்சியர் அபிநயாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்தப் போராட்டத்தில் மக்களுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்பதைக் கடலூர் விளக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி, ரவிச்சந்திரன், சரவணன், ராஜேஷ், கண்ணன் உள்ளிட்டோர் சார் ஆட்சியர் அபிநயாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், இன்னும் மூன்று மாதம் எங்களுக்கு அவகாசம் கொடுங்கள். அதற்குள் முந்திரி விளைந்து விடும் அதை நாங்கள் அறுவடை செய்து விடுகிறோம். அதற்கான அவகாசங்களை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அரசு தரப்பில் மூன்று மாதத்திற்கு பின், நாங்கள் இப்பகுதியை எங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்று எழுதிக்கொடுங்கள் என்று தெரிவித்தனர்.
ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த விவசாயிகள், எங்கள் நிலங்களை நாங்கள் விட்டுத் தர மாட்டோம் என்று கூறினர்.
நீண்ட நேரத்திற்கு பின் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் முயற்சியில் இறங்கினர்.
முதலில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடன் வந்திருந்த நிர்வாகிகளையும் விவசாயிகளையும் கைது செய்தனர்.
நாங்கள் என்ன போராட்டம் செய்யவா வந்திருக்கிறோம் மக்களுக்காக தானே பேச வந்திருக்கிறோம் எங்களை ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேட்டனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பெண்களை பெண் காவலர்களைக் கொண்டு ஒரு பகுதிக்குள் நிறுத்தி அவர்கள் யாரும் வெளியே வராதபடி வைத்துவிட்டு, பின்னர் பொக்லைனை எடுத்துச் சென்று பிஞ்சும் காயுமாக இருந்த முந்திரி மரங்களை அடியோடு சாய்த்தனர்.
இதைப் பார்த்து கதறி அழுத பெண்கள் இந்த முந்திரி மரங்களை வளர்க்க நாங்கள் எத்தனை ஆண்டு காலம் போராடி இருப்போம் இருப்போம் இன்று நான் வளர்த்த முந்திரி மரத்தை என் கண் முன்னே வெட்டுகிறீர்களே அதற்கு பதிலாக என்னை வெட்டுங்கள் என்று கதறி அழுதபடி வெட்டி வீழ்த்தப்பட்ட முந்திரி மரத்தை கட்டித் தழுவி கதறி அழுதனர்.
ஆனால் எதையும் கண்டு கொள்ளாத காவல்துறையினர் அவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பெண்களின் அழுகைகளும், விம்மி வெடித்த வார்த்தைகளும் சோகத்தை ஏற்படுத்தியது.
விளைநிலங்களில் உள்ள மரங்களை அகற்ற பகுதிக்கு வந்த ஐந்து பொக்லைன் எந்திரங்கள், ஆம்புலன்ஸ் தீயணைப்பு வண்டிகள் ஆகியவைகள் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.