தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் வகையில், கட்சியின் நிர்வாக வசதிக்காக, மாவட்டங்களை 120 மாவட்டங்களாக பிரித்து, முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்காக, சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, நாகை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை பனையூரில் நடந்தது. இதில், கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் நிர்வாகிகளை சந்தித்து நேர்காணலை நடத்தினர். விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள், தொண்டர்கள் அவரைக் காண கட்சி அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆலேசானை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய்,
‘உங்களை நம்பி மக்களுக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இனி நீங்கள்தான் கட்சியின் வளர்ச்சியை பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தனை ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போதும் எனக்காக துணை நின்று என்னுடன் உழைத்தீர்கள்,பயணித்தீர்கள்.
உங்களது நீண்ட கால கோரிக்கையின்படிதான் நாம் தற்போது கட்சியை தொடங்கி சிறப்பாக பயணத்தை தொடர்ந்து வருகிறோம். அனைவரும் சேர்ந்து பயணிப்போம். நிச்சயம் 2026ம் ஆண்டு வெற்றி பெறுவோம். முன்பு நாம் மக்களுக்கு சேவை ஆற்றியதை விட இனிவரும் காலங்களில் கடுமையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.