திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 35). இவர் வேலூரில் உள்ள தனியார் உணவகத்தில் சூப்ரவைசராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டு தேவையான எலக்ட்ரானிக் பொருளான வாட்டர் ஹீட்டர் ஒன்றை ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை இவர் ஆர்டர் செய்த பொருள் பார்சலாக வந்துள்ளது. அதை பணத்தை கட்டி பெற்று கொண்ட தினகரன்பார்சலை திறந்து பார்த்து போது அதிர்ச்சி அடைந்தார். அந்த பார்சலில் வந்த வாட்டர் ஹீட்டர் எரிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது சம்மந்தமாக நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த நிறுவன நிர்வாகிகள் சரிவர பதிலளிக்கவில்லை. இதனால் வேதனையடைந்த தினகரன், தான் பாதிக்கபட்டதை சமூக வலைதலங்களில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதில் தன்னை ஏமாற்றிய நிறுவனத்திடம் எச்சரிக்கையாக இருக்கவும் இது சம்மந்தமாக வழக்கு தொடர போவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஆன்லைனில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.