திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தலைமை குருக்களை இணை ஆணையர் ஒருமையில் பேசியதாக கூறி சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சுமுக தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை தை மாதம் பௌர்ணமி.
இந்நிலையில நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. அப்போது அருணாச்சலேஸ்வரர் கோவிலின் இணை ஆணையர் ஜோதி, கோவிலின் தலைமை குருக்களை ஒருமையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கொடி மரத்தின் அருகில் உள்ள யாகசாலை அருகில் ஒன்று சேர்ந்தனர். இதனால் அங்கு ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த, இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் அறங்காவல் குழுவினர் சிவாச்சாரியார்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னரல் கொடிமரம் அருகில் உள்ள உள்துறை அலுவலகத்திற்கு சிவாச்சாரியார்களை அழைத்து சென்று சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த யாரும் எந்த பதிலும் தெரிவிக்காமல் அவரவர்கள் கலைந்து சென்று விட்டனர்.
முன்னதாக காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அறங்காவலர்களிடம் பேசுகையில், தலைமை குருக்கள் ஒருவரை பார்த்து இடைத்தலைவராக செயல்படுகிறார்களா என கேட்கிறார்கள் நான் அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பல லட்சம் ரூபாய் நன்கொடையாக வாங்கி கொடுத்துள்ளேன்.
அப்படிப்பட்ட நபர்கள் வரும்போது கோவிலுக்கு அழைத்து வரும் நிலை ஏற்படும். கோவிலில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் முக்கிய பிரமுகர்களும் ஆட்களை அழைத்து வருகிறார்கள். அதற்கு ஏதாவது இந்த அறநிலையத்துறை நிர்வாகம் கணக்கு வைத்திருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் தலைமை குருக்கள் ஆகிய தனக்கே இந்த நிலைமை என்றால் மற்ற குருக்கள்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்கள். சிவாச்சாரியார்களோடு இந்து அறநிலை துறை அதிகாரிகள் காவல்துறையினர் அருணாச்சலேஸ்வரர் கோயிலின் அறங்காவலர்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றபோது அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் விரைவாக சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.