விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பொன்முடி, முன்னாள் எம்பி கெளதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா மாவட்ட ஜெயச்சந்திரன் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மகளிர் அணியினர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
பின்னர் பேசிய எம்.பி., கனிமொழி, திராவிட மாடல் ஆட்சியை தாங்கி பிடிக்ககூடிய குழுவாக மகளிர் உள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியின் மூலம் மகளிருக்கான திட்டங்களை கொடுத்து வருகிறார். பெண்கள் பட்டம் பெறுவதற்கு சாதாரணமாக வந்துவிடவில்லை. போராட்டம் இல்லாமல் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது திமுகாவால் தான்.
பெண்களை முன்னேற்றக்கூடிய ஆட்சி இருந்தால்தான் பெண்களுக்கு வளர்ச்சி கிடைக்கும்.
அதனால் தான் புதுமைபெண் திட்டம் மூலம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கல்லூரி பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
நாட்டில் எத்தனையோ சாதியால், மத்தால், பிற்போக்கு சக்திகள் பிளவு படுத்த பார்க்கின்றனர். பெண்கள் அவசியம் பெரியாரை படிக்க வேண்டும். பெரியாரை யாரும் வெல்லவும் முடியாது; வீழ்த்தவும் முடியாது.
இந்தமண்ணில் ஜாதி இல்லை எனக் கூறும் ஒவ்வொருவரின் மனதிலும் பெரியார் வாழ்ந்து வருகிறார். பிற்போக்குத்தனத்தை திணிக்காதே என்று சொல்லக்கூடிய மாநிலம் தான் தமிழ்நாடு என்றும்,
பட்ஜெட்டில் திருக்குறள் மட்டுமே சொல்லப்படுகிறது. தமிழகத்திற்கு வேறொண்றும் இல்லை என்றும் அவர் பேசினார்.