செஞ்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்ய போலீசாரால் அழைத்துவரப்பட்ட கருக்கா வினோத் நீதிபதியை தாக்க முயற்சித்த சம்பவத்தை கண்டித்தும், நீதிபதிக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க கோரியும், கருக்கா வினோத் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் செஞ்சி வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் பிரவீன், கலியமூர்த்தி ஆகியோர் தலைமையில் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.