திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களை தரக்குறைவாக பேசிய திட்ட இயக்குனரை கண்டித்து அலுவலர்கள் பணி புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் நடைபெற்ற திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை முகமை கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை அஸ்ஸாம் நக்சலைட்டுகள் என்றும் வில்லன் நடிகர்கள் என்றும் தரக்குறைவாக விமர்சித்த மாவட்ட திட்ட இயக்குனர் செந்தில் வடிவை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பொறியாளர்கள்,பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் என 927 பேர் பணி புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
உடனடியாக திட்ட இயக்குனரை பணியிடமாற்றம் செய்யவில்லை என்றால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பாக 31ஆம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.