பிரதமர் மோடி திருச்சிக்கு கடந்த 2-ம் தேதி வந்த போது, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர், விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை நிறுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு முதல் நாள் இரவும், 2-ம் தேதி காலையிலும் வழங்கப்பட்ட உணவு தரமில்லாமல் கெட்டுப் போயிருந்தது.
அந்த உணவுகளை துாக்கி எறிந்த போலீசார், காலையில் பசி தாங்க முடியாமல் தட்டுத்தடுமாறி ஆங்காங்கே கிடைத்ததை வாங்கி சாப்பிட்டு பசியாறினர்.
விமான நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த 2 பெண் போலீசார், அந்த வழியாக பல்கலைக் கழகத்திற்கு பைக்கில் சென்ற என்னையும், பின்னால் வந்த எனது நண்பரையும் நிறுத்தி வழி யில் ஏதாவது ஓட்டல் இருந்தால் இறக்கிவிடுங்க சார் என்று கேட்க பசியைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கணும் அதற்கு மறுப்பு கூறாமல் அவர்களை அழைத்துச் சென்றோம்.
ஒவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டே சென்ற போதும், 3 கி.மீ. துாரம் வரை எந்த ஓட்டல் கடையும் திறக்கவில்லை. இதனால், பொறுமையிழந்த பெண் போலீசார், நேத்திக்கு சாயங்காலம் இந்தப் பகுதிக்கு போலீசார் சென்று விழா முடிந்து பிரதமர் திருச்சியை விட்டு செல்லும் வரை கடைகளை திறக்கக் கூடாது என்று எச்சரித்திருந்தனர்.எல்லா கடைகளும் மூடப்பட்டுள்ளது.
நாங்கள் கூறிய உத்தரவால், இப்போது எங்களுக்கே உணவு கிடைக்காமல் அலைய வேண்டியுள்ளது. இது மாதிரி எங்க ஆளுங்க எத்தனை பேர் உணவு கிடைக்காமல் அலையிறாங்களோ தெரியவில்லை. ரொம்ப தூரம் வந்துட்டோம் சார். இங்கேயே இறக்கிவிடுங்க, சாப்பிடாட்டாலும் பரவாயில்லை. மறுபடியும் லிப்ட் கேட்டு எங்க பாய்ன்ட்டுக்கு போயிடுறோம் என்று கூறியவாறு இறங்கிக் கொண்டனர். அவர்களை பார்க்க சங்கடமாக இருந்தாலும், வேறு வழியில்லாமல் நாங்களும் இறக்கிவிட்ட பின்னர் எங்கள் பணிக்கு சென்றோம்.
போலீசார் போட்ட உத்தரவால், போலீசாரே பாதிக்கப்பட்டது பரி தாபத்தை ஏற்படுத்தினாலும், விழா நடத்தியவர்கள் உணவு விஷயத்தில் அக்கறை செலுத்தாமல் பலரை அலையவிட்டது வேதனையை ஏற்படுத்தியது..