ஆம்பூர் கே.ஏ.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனசரக அலுவலரும், பறவைகள் கணக்கெடுக்கும் பணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எம்.பாபு தலைமையில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் இருந்து வலசை வரும் ஸ்டில்ட், நெடுங்கால் உள்ளான்,பைப்பர் மற்றும் அடர்ந்த காடுகளில் மட்டுமே காணப்படும் அரசவால் நீர் பிடிப்பான் உள்ளிட்ட 208 வகையான 2,467 எண்ணிக்கை கொண்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவையினங்கள் அடையாளம் காணப்பட்டன.
ஆம்பூர் விண்ணமங்கலம் ஏரி, செட்டேரி அணையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாகா சதீஸ் கிடிஜாலா, உதவி வனப் பாதுகாவலர் ராதாகிருஷ்ணன், இயற்கை ஆர்வலர் ஆற்றல் பிரவீன் குமார், விஐடி விலங்கியல் துறை பேராசிரியர் ரவிக்குமார், தொண்டு நிறுவன நிர்வாகி அருள், ஆனந்தராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கணக்கெடுப்பு பணியில் ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் பிரிவை சேர்ந்த ஜே.காளியப்பன், ஏ.தினேஷ், முதலாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் பிரிவை சேர்ந்த டி.தேவா, முதலாமாண்டு இயந்திரவியல் பிரிவை சேர்ந்த எஸ்.பத்ரிநாத், இரண்டாம் ஆண்டு இயந்திரவியல் பிரிவை சேர்ந்த எம்.கார்த்திக், ஜே.கமலேஷ் மற்றும் ஆர்.ராஜேஷ் உள்ளிட்ட மாணவர்கள் தன்னார்வலர்களாக பங்கேற்றனர்.