ஜன- 8 முதல் 10 – ம் தேதி வரை நடத்த உத்தரவு
எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளியில் சிறப்பு தூய்மை பணி ஜன- 8 முதல் 10 -ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது,
பள்ளிகல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை, தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தன் சுத்தம், பள்ளிவளாக தூய்மை, சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த பொருட்களை பயன்படுதல், கய்கறி தோட்டம் அமைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி, திட்டம் கொண்டு வரப்பட்டது.
சிறப்பு செயல்பாடக ஜனவரி 8 முதல் 10-ம் தேதி வரை சிறப்பு பள்ளி துய்மைப் பணிகள் முன்னெடுக்க வேண்டும். அதன்படி பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னால் மாணவர்கள் மன்றம் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்
வகுப்பறைகளை தூய்மை செய்தல் உட்பட பள்ளி வளாகங்களில் அனைத்து விதமான துப்பரவு பணிகளையும் செய்ய வேண்டும் , இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன , அதை பின்படுத்தி தூய்மைப் பணிகள் செய்து முடிக்கப்பட வேண்டும், அதற்கான நிதியை பள்ளி பாரமரிப்பு மானியத்தில் இருந்து பயன்படுத்தலாம். மேலும் தனியார் தொழில் நிறுவனங்களின் சமுக பொறுப்புணர்வு நிதி மூலமும் பணிகளை செய்யலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.